‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
வனிதா விஜயகுமாரும், நடிகருமான பவர் ஸ்டார் சீனிவாசனும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் அவை என்று விளக்கினார்.
அப்போது பேசிய வனிதா விஜயகுமார், இரண்டு நடிகர்கள் சேர்ந்து போட்டோ வெளியிட்டால் அதை திருமணம் என்பதா. இதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிப்பட்ட வாழ்கையில் பெண்களுக்கு சுதந்திரம் தேவை. ஒரு ஆண் நான்கைந்து திருமணம் செய்தால் கூட அதை யாரும் பேசுவதில்லை. ஆனால் அதுவே ஒரு பெண் செய்தால் பேசுகின்றனர். நான் நான்கு அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை. பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால் தான் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. ஒருவருடன் வாழ்ந்து கொண்டே பலருடன் தொடர்பில் இருப்பது தான் தவறு. நான் 40 கல்யாணம் பண்ண மாட்டேன், எதற்காக அப்படி சொன்னேன் என்று உங்களுக்கு புரியும். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்றார்.
சீனிவாசன் பேசுகையில், ‛‛இந்த சமூகத்தில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சரியான வாழ்க்கையை வாழ்வது இல்லை. ஆனால் வெளியே சொல்லாமல் வாழ்கிறார்கள். அந்தவகையில் வனிதா விஜயகுமார் ஒரு இரும்பு பெண்மணி என்றார்.