'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
நீலப்பட நடிகையாக பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது இவர் இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். அவர் அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே 2 இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப்படத்தில் அவர் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்துக்கு பட்டா என்று பெயர் வைத்துள்ளனர். பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீசாந்தும் சன்னி லியோனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.