பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

சினிமாவில் சில முதல் விஷயங்கள் நிராசையாகிப் போகாமல் நிறைவேற வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள். அப்படியான ஒரு முதல் கனவு 'இந்தியன் 2' படம் மூலம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு அமைந்தது. அந்தக் கனவு நனவானாலும், முழுவதுமாக நிறைவேறாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
ஷங்கர் இயக்கும் படத்திற்கு முதல் முறை இசை, கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு முதல் முறை இசை என 'இந்தியன் 2' பட வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் ஒப்பந்தமான பிறகு இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “இந்தியன் 2' படம் எனக்குக் கிடைத்ததும் மிக உற்சாகமாக இருந்தேன். எனது பள்ளி நாட்களில் இருந்தே நான் ஷங்கரின் பெரிய ரசிகன். அதோடு நான் கமல் சாருடனும் பணியாற்றியது இல்லை. மேலும், 'இந்தியன்' படம் அவர்களது மிகச் சிறந்த படம். எனது கனவு நனவானது. அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு நண்பனுடன், 25 வயதுடைய ஒரு இயக்குனருடன் பணியாற்றுவது போல இருக்கிறது,” என்றெல்லாம் பெரும் உற்சாகத்துடன் பேசியிருக்கிறார்.
'இந்தியன் 2' படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் மேற்கொண்டு வளராமல் இருப்பதில் தயாரிப்பாளருக்கு எந்த அளவிற்கு கவலையோ அந்த அளவிற்கு அனிருத்திற்கும் இருக்கும். தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் படைப்பாளிகளுடன் முதல் முதலில் இணைந்த படம் முடிந்து திரைக்கு வருவதில் தான் அவருடைய கனவிற்கும், உற்சாகத்திற்கும் ஒரு அர்த்தத்தைத் தரும்.
அனிருத்துக்காகவாவது ஷங்கர், 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுப்பாரா?.




