ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளிவந்து வரவேற்பைப் பெற்ற 'அசுரன்' படம் தெலுங்கில் 'நரப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கத்தில் வெங்கடேஷ், பிரியாமணி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஜுலை 20ம் தேதியன்று வெளியாகிறது.
இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்ததுமே அதற்கு வெங்கடேஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். படத்தை தியேட்டர்களில்தான் வெளியிட வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதையும் மீறி படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த வெங்கடேஷ், “நரப்பா, படம் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த கொரானோ தொற்று காலத்தில் படத்தை வெளியிட வேறு வழியில்லை. ஓடிடி வெளியீடு என்பது கடைசி வழியாக அமைந்தது. அமேசான் தளத்தில் படத்தை வெளியிடுவதால் உலகம் முழுவதும் பல லட்சம் பேர் படத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழைப் போலவே படம் தெலுங்கிலும் வரவேற்பைப் பெறுமா என்ற ஆவல் எழுந்துள்ளது. படத்தின் டிரைலருக்கு 11 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.