ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழகத்திலும் ஆந்திராவிலும் படப்பிடிப்பு நடத்த, அந்த மாநில அரசுகள் அனுமதித்துள்ளன. இதைத்தொடர்ந்து படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் கேரள அரசு இப்போது வரை அந்த மாநிலத்தில் சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அதேசமயம் பாரபட்சமாக சீரியல் படப்பிடிப்புகள் நடத்திக்கொள்ள மட்டும் அனுமதி வழங்கியிருக்கிறது.
இதுகுறித்து சினிமா தொழிலாளர் அமைப்பின் தலைவரான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் கேரள முதல்வருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருக்கிறார். ஆனாலும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் மோகன்லால் பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகி வரும் புரோ டாடி உள்பட பெரிய படங்கள் தங்களது படப்பிடிப்பை நடத்துவதற்காக தமிழகம் மற்றும் ஆந்திராவை நோக்கி கிளம்பி விட்டார்கள்.