8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் வெற்றி. அதன் பிறகு ஜீவி, கேர் ஆப் காதல் படங்களில் நடித்தார். தற்போது மெம்மரீஸ், தீங்கிரை படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரனிஷ் இன்டர்நேஷனல் சார்பில் சேலம் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார். தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷாம் இயக்குகிறார். வெற்றியுடன் வித்யா பிரதீப், புதுமுகம் விஸ்மியா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். வனிதா விஜயகுமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜே.கே.ஆர் ஒளிப்பதிவு செய்கிறார்.கணேஷ் சந்திரசேகர் இசை அமைக்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.