
வாரத்துக்கு ஒரு அப்டேட் - வலிமை படக்குழு முடிவு
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து வெளியான அப்டேட்டுகளால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
படப்பிடிப்பின் இறுதிக்கட்டப் பணிகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும் வாரத்துக்கு ஒரு அப்டேட் வீதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். வலிமை படத்தின் டீசர் ரிலீசுக்கு முன்பாக, படத்திலிருந்து 2 சிங்கிள் பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அஜித் மதுரையில் ஆடி பாடும் ஓபனிங் பாடலும், ஒரு குடும்ப செண்டிமெண்ட் பாடலும் வெளியிட உள்ளனர். இவற்றுக்கான இறுதிக்கட்ட இசைக் கோர்ப்பு பணிகளில் இருக்கிறாராம் யுவன்.
ஆயுத பூஜை பண்டிகைக்கு படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஒரு சில மாதங்களே இருப்பதால் இனி, வாராவாரம் வலிமை அப்டேட்டை கொடுப்பதென முடிவில் இருக்கிறார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!