ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் கே9 ஸ்டுடியோஸ் என்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் 1980களில் வடசென்னையில் செயல்பட்டு வந்த பாக்ஸிங் அணிகள் சம்பந்தப்பட்ட கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கொரோனா அலை காரணமாக ஜூலை 22ல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஓடிடி தளங்களில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று, ஆர்யாவின் டெடி போன்ற படங்கள் நல்ல வசூலை கொடுத்ததை அடுத்து இப்போது முன்னணி ஹீரோக்களின் படங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதில் ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில், ஜகமே தந்திரம் படத்தை 55 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது. அதையடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை டிஸ்னி ஹாட் ஸ்டார் 42 கோடிக்கு விலை பேசியுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆர்யாவின் சார்பட்டா படத்தை அமேசான் பிரைம் ரூ. 32 கோடிக்கு பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.