50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி | தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகியவற்றில் தியேட்டர்களைத் திறக்க அந்தந்த அரசுகள் அனுமதி வழங்கிவிட்டன. இருந்தாலும் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி எதுவும் சொல்லாத தயாரிப்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தியேட்டர்களைத் திறப்பதில்லை என தியேட்டர்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.
அது சம்பந்தமாக நேற்று தெலங்கானா பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸின் பொதுக்குழு கூடியது. ஓடிடி தளங்களில் திரைப்படங்களை நேரடியாக வெளியிடக் கொடுப்பதை அக்டோபர் வரையில் நிறுத்த வேண்டும். தியேட்டர்களும் திரையுலகத்தில் ஒருங்கிணைந்த ஒன்று தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கில் சில பெரிய நடிகர்களின் படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த வருடம் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் வந்த போது இங்குள்ள தியேட்டர்காரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தற்போது யாரும் அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை.