ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாட்டில் உள்ள பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களைத் திறக்க ஒவ்வொரு மாநிலமாக சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுமதி வழங்கி வருகின்றன.
தெலங்கானா மாநிலத்தில் ஜுன் 20ம் தேதி முதலே தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்காத காரணத்தால் அங்கு தியேட்டர்களைத் திறக்கவில்லை. இதனிடையே, ஆந்திராவில் ஜுலை 8 முதல் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 5 மணி வரையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தெலுங்குத் திரையுலகினல் தியேட்டர்களைத் திறப்பது பற்றி விவாதிக்க உள்ளனர். ஆந்திராவில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணங்கள் குறித்த பிரச்சினையும், தெலங்கானாவில் தியேட்டர்களுக்கான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதும் நிலுவையில் உள்ளன. இது பற்றியெல்லாம் பேசி முடித்த பிறகுதான் தியேட்டர்களை எப்போது திறப்பது என்பது குறித்து தெலுங்குத் திரையுலகினர் முடிவு செய்வார்களாம்.