சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா |

நடிகர் தனுஷ் தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதனை சேகர் காமுலா இயக்குகிறார். அமெரிக்காவிலிருந்து நேராக ஐதராபாத் வந்த தனுஷ், இயக்குனர் சேகர் காமுலா, தயாரிப்பாளர்கள் நாராயந்தாஸ் நாரங், சுனில் நாரங், பாரத் நாரங், மற்றும் பி ராம் மோகன் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தற்போது தயாராகும் பான் இந்தியா படம் குறித்து பேசியதோடு, தனுஷ் நடிப்பில் ஒரு ஹாலிவுட் படம் ஒன்றை தயாரிக்கவும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
தனுஷ் ஏற்கெனவே தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆப் பக்ரி என்ற பிரெஞ்ச் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது தி கிரே மேன் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் தனுசுக்கு சர்வதேச சினிமா சந்தையில் ஒரு மார்க்கெட் உருவாகி வருகிறது. அதன் அடிப்படையில் ஹாலிவுட் படம் ஒன்றை உருவாக்க ஆந்திர தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.