Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல் எதிரொலி ; தனி ஆளாக புரமோட் செய்த நிவின்பாலி | மும்பை போலீஸ் தெலுங்கு ரீமேக் ; சுதீர்பாபு துணிச்சல் முயற்சி | ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேதன் சீனு: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு | நவ.,4ல் ‛லவ் டுடே' வெளியீடு | தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்' | தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு | நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் | வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! | பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் - நீண்டநாள் கனவு நிறைவேறியது : அர்ஜூன்

02 ஜூலை, 2021 - 17:55 IST
எழுத்தின் அளவு:
Arjuns-Anjaneyar-temple-kumbabishekam-happend-today

நடிகரும், தீவிர ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் பக்தருமான அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோயில் கட்டியுள்ளார். இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று(ஜூலை1) சிறப்பாக நடைபெற்றது.

அர்ஜுன் கூறுகையில் “ இந்த கோயில் என்னுடைய 17 வருடக் கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை. தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலைச் செய்யத் தூண்டுதலாக இருந்தது. இருப்பினும் இந்த கோயிலை நான் கட்டினேன் என்பதை விட ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்யத் தூண்டியது என்பது தான் உண்மை.
ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது. பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோயிலின் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோயிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோயிலின் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவியார் துர்கா ஸ்டாலின் இன்று அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோயிலுக்கு வந்து தரிசனம் பெற்றார். அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. விரைவில் இந்த கோயில் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ளது. இந்த கொரோனாவால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கடவுளின் அனுக்கிரங்களும், ஆசியும் மக்கள் அவசியம். கடவுளின் அருள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை”.

இவ்வாறு அர்ஜூன் கூறினார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
நாரப்பாவை ஓடிடியில் வெளியிடக்கூடாது : தற்கொலைக்கு முயன்ற ரசிகைநாரப்பாவை ஓடிடியில் ... கமலுக்கு நான்கு வில்லன்கள் ? கமலுக்கு நான்கு வில்லன்கள் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

KRISHNSWAMY MADIVANAN - Chennai,இந்தியா
04 ஜூலை, 2021 - 08:30 Report Abuse
KRISHNSWAMY MADIVANAN இந்த கோயில் இவருடைய இடத்தில தான் கட்டப்பட்டதா
Rate this:
vns - Delhi,யூ.எஸ்.ஏ
03 ஜூலை, 2021 - 14:40 Report Abuse
vns ஜெய் ஹனுமான். திரு அர்ஜுன் அவர்களுக்கு சுவாமி ஹனுமான் அவர்களின் பரிபூர்ண ஆசி கிடைக்கட்டும்.
Rate this:
Selva -  ( Posted via: Dinamalar Android App )
03 ஜூலை, 2021 - 13:13 Report Abuse
Selva பக்தி , தேசபக்தி கொண்ட நல்ல மனிதர் அர்ஜீன்..
Rate this:
03 ஜூலை, 2021 - 11:18 Report Abuse
balachandar K jai SriRam. Jai Anjanyam Sri Anjanayam
Rate this:
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
03 ஜூலை, 2021 - 10:01 Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு மகாபாரத போரில் அம்புவில்லை எடுத்தான் அர்ஜுனன் என்பது வரலாறு. இந்த காலத்து மக்கள் அறிந்த சினிமா புகழ் அர்ஜுனனோ தீவிர பக்தியால் ஒரு அழகான ஆஞ்சநேயரின் கோவிலை கட்டி உள்ளார். வாழ்க உங்கள் தொண்டு.. நிறைய பேர் இப்படி இறை பாதையில் நற்பணிகள் செய்தால் நமது ஹிந்து கலாச்சாரம் நிலைத்து நிற்கும்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in