என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் சீனியர் ஹீரோவான அர்ஜுன். இவருக்கு சொந்தமாக சென்னை, கெருகம்பாக்கத்தில் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் ஒரு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயிலை கடந்த சில வருடங்களாக கட்டி வருகிறார். மிகப் பெரும் ஆஞ்சநேயர் சிலை ஒன்றை அங்கு நிறுவியுள்ளார்.
அக்கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜுலை, 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அர்ஜுன். தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய ரசிகர்களுக்காக மூன்று மொழிகளிலும் அந்த அறிவிப்பில் பேசியுள்ளார்.
“என்னுடைய நீண்ட கால கனவுன்னு சொல்லலாம். தமிழகத்துல நாங்க கட்டியிருக்கிற ஆஞ்சநேயர் கோயில் வேலைகள் இப்படி முடிஞ்சிருக்கு. இந்த கோயிலோட கும்பாபிஷேகம் ஜுலை 1, 2 செய்யறதா முடிவு பண்ணியிருக்கோம். நிறைய பேரைக் கூப்பிட்டு இந்த பங்ஷனை ரொம்ப கிரான்டா பண்ணலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ஆனா, இன்னைக்கு இருக்கிற நிலைமை கொரானோ, யாரையும் கூப்பிட முடியாத ஒரு சூழ்நிலை. இருந்தாலும் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் நீங்கலாம் இந்த பங்ஷனை மிஸ் பண்ணக் கூடாதுன்னு யு டியூப்ல லைவ் ஸ்ட்ரீம் அரேஞ்ச் பண்ணியிருக்கோம்,” என வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இது சம்பந்தமாக அர்ஜுன் சந்தித்து அவருக்கு அழைப்பு விடுத்திருப்பார் எனத் தெரிகிறது.