Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய், சூர்யா, திருமணம், எதிர்காலம் - விக்னேஷ் சிவன் பதில்கள்

28 ஜூன், 2021 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Vignesh-shivan-chat-with-fans-and-reply-about-Nayanthara,-Rajini,-Vijay-and-future

தமிழ்த் திரையுலகத்தில் எத்தனையோ காதல் ஜோடிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அவர்களுக்குக் கிடைக்காத ஒரு பரபரப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் ஜோடிக்குக் கிடைத்துள்ளது. நயன்தாரா தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக இருப்பது தான் அதற்கு முக்கிய காரணம். அதோடு, அடிக்கடி ஜோடியாக தங்களது புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிடுவதும் ஒரு காரணம்.

இந்த காதல் ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறது என்று பலர் கேட்டுவிட்டார்கள். அந்தக் கேள்வியை, விக்னேஷ் சிவன் நேற்று ரசிகர்களிடம் சாட் செய்த போதும் ஒரு ரசிகர் மீண்டும் கேட்டிருக்கிறார். அதற்கு மட்டுமல்ல நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய், சூர்யா பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார் விக்னேஷ் சிவன். அவற்றிலிருந்து சில கேள்வி, பதில்கள்...
திரையுலகத்திற்கு நீங்கள் வர இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது யார்?
ரஜினிகாந்த்

ப்ரோ, உங்களுக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச நடிகர் யாரு?

ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் நடித்த கதாபாத்திரங்களில் உங்களுக்கு விருப்பமானது ?
பாட்ஷா

சூப்பர் ஸ்டாருன் ஒரு படம் செய்தால், அது எந்த மாதிரியான படமாக இருக்கும் ?

ஹேப்பி, ஜாலி, கொண்டாட்டமா, குடும்பப் பாங்கான படமா மட்டும் இருக்கும்.
விஜய்க்காக ஒரு வரி
அந்த கண்ண பாத்தாக்கா... லவ் தானா தோணாதா...

உங்களுக்கு விருப்பமான விஜய் படம் ?
கில்லி

சூர்யா நடித்தவற்றில் உங்கள் விருப்பமான படம் ?

காக்க காக்க, அயன், கஜினி, சிங்கம், சூரரைப் போற்று.
விஜய் சேதுபதியை நானும் ரௌடி தான் படத்துல இருந்த மாதிரி, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துல ஸ்மார்ட்டா, க்யூட்டா, பிட்டா எதிர் பார்க்கலாமா ?
அவர் மாஸ்டர் செப் ஷுட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் நிறைய சாப்பிடுவார் என வருத்தமாக இருக்கிறது. ஆனால், அவர் க்யூட்டாக இருப்பார் என உறுதி தருவேன்.

பிடித்த மலையாள நடிகர்கள்?
மோகன்லால், பகத் பாசில்

உங்களுக்குப் பிடித்த தெலுங்கு நடிகர்?
அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகியோரைப் பிடிக்கும்.

சமந்தா பற்றி சொல்லுங்களேன்?
அவர் ஒரு அற்புதமான நடிகை. உள்ளேயும், வெளியேயும் சிறந்த மனிதர் என்பதே ரொம்ப முக்கியம்.

யாரை இயக்க வேண்டும் என்பது உங்களது பெரும் விருப்பம் ?

லியானோர்டோ டி கார்ப்பியோ
உங்களுக்குப் பிடித்த கதாநாயகி ?
மோனிகா பெலுசி

காதல் சம்பந்தமான கதைகளையே எழுதி வருகிறீர்கள், அதைத் தவிர வேறு எதை எழுத உங்களுக்கு ஆர்வம் ?
சயின்ஸ் பிக்ஷன், பேன்டஸி அல்லது எமோஷனல் கதைகள்... எதிர்காலத்தில் இவற்றை எழுத விருப்பம்.

நயன்தாராவுக்காக உங்களின் முதல் கிப்ட்...
தங்கமே... பாடல்

நயன்தாராவுக்கு எந்த லுக் பொருத்தமாக இருக்கும், வெஸ்டர்ன், டிரடிஷனல் உங்கள் விருப்பம் எது?

அவர் புடவையில் இருப்பது ரொம்ப பிடிக்கும்.
நயன்தாரா அழகின் ரகசியம் என்ன?
பிரார்த்தனைகள்

நயன்தராவுடன் உங்களது விருப்பமான இடம் ?
அவருடன் எங்கு சென்றாலும் அது உடனடியாக விருப்பமான இடமாகிவிடும்.

நயன்தாரா நடிச்சதுல உங்க அபிமான திரைப்படம்
ராஜா ராணி

நயன்தாரா, உங்களைப் பற்றிய சில ரகசியம்

டின்னர் முடிந்ததும் வீட்டில் அனைத்து பாத்திரங்களையும் அவரே கழுவுவார்.
நயன்தாரா கூட நடிக்க ஏன் டிரை பண்ணல ?
முயற்சி பண்றேன். ஆனா, அவங்க கண்டுபிடிச்சிடறாங்க.

நயன் சமைக்கிறதுல பிடிச்சது ?

கீ ரைஸ், சிக்கன் கறி

ஒரு நாள் திடீரென, நீங்கள் நயன்தாராவாக மாறிவிட்டால் என்ன செய்வீர்கள் ?
ஷுட்டிங் போக வேண்டியதுதான்.

அடுத்து எந்த நாட்டுக்கு போகப் போறீங்க ?

ஸ்பெயின்


நயன்தாரா பத்திதான் எல்லாரும் கேக்கறாங்க, என்ன பீல் பண்றீங்க ?


பெருமையா...

நயன்தாராவை இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆவலுடன் காத்திருக்கிறேன் ?
அதற்கு ரொம்ப செலவு ஆகும் ப்ரோ, கல்யாணம் மற்றவற்றிற்கு... அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கொரானோ செல்வதற்காகக் காத்திருக்கிறேன்,

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த சிறந்த நபர்

நயன் அம்மா, ஓமன குரியன்.

நெற்றிக்கண் படத்தை எப்போது பார்க்கலாம்?
விரைவில்...

காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு முடிந்ததா?
இன்னும் 15 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.

உங்கள் பாடல்கள் அற்புதமாக உள்ளது, உங்களது பெரிய இன்ஸ்பிரேஷன் யார் ?
கண்ணதாசன், வாலி, வைரமுத்து, தாமரை, நா.முத்துக்குமார், தனுஷ், சிம்பு.

டைரக்டர் ஆகலன்னா என்ன பண்ணி இருப்பீங்க ?
டைரக்டர் ஆக டிரை பண்ணிட்டு இருந்திருப்பேன்.

நீங்கள் பாலிவுட் படம் இயக்க வேண்டி இருந்தால் யார் உங்களது ஹீரோ ?

ரன்பீர் கபூர் ரொம்ப பிடிக்கும்.
அனிருத் உடனான சிறந்த தருணம்..
நானும் ரௌடிதான் படத்தோட பாடல் பதிவு மற்றும் பின்னணி இசை தருணங்கள். எப்போதும் சிறந்த நேரம்.

யுவன் பத்தி சொல்லுங்க
மேஸ்ட்ரோ அற்புதமானவர்... அவருடைய இசையும், அவருடைய உணர்வும் பிடிக்கும். எனக்குத் தெரிந்தவர்களில் அற்புதமான மனிதர் அவர்.

ஒரு ஹாரர் படம் இயக்க வேண்டும், யார் உங்களது முக்கிய நட்சத்திரம் ?

ஒரு அழகான பேய்.

உங்கள் வீட்டில் எந்த இடத்திலிருந்து ஸ்கிரிப்ட் எழுதுவீர்கள் ?
எல்லாமே, பாத்ரூமிலிருந்துதான் ஆரம்பமாகும்.

ஹீரோவா நடிக்க வாய்ப்பு வந்தால், எந்த மாதிரி கதை தேர்வு செய்வீங்க ?

ஹீரோவா நடிக்க ஆசைப்பட்டு கெட்டுப் போன ஒரு இயக்குனரோட பயோபிக்கைத் தேர்வு செய்யலாம்.
நீங்க பாத்ரூம் பாடகரா ?
பாத்ரூம் பாடலாசிரியர்

நீங்கள் எழுதிய, உங்களுக்குப் பிடித்த வரிகள்
அர்த்தங்கள் தேடிப் போகாதே... அழகு அழிந்து போகும்...

நீங்க வாழ்க்கைல சந்திக்க முடியாம தவறவிட்டவர் யார்?
நாகேஷ், விசு சார்.

ஸ்பேஸ் டூர் போகணும்னா யாரைத் தேர்வு செய்வீங்க?
லதா மங்கேஷ்கர் இல்லன்னா சித்ரா

உங்களோட கனவுப் படம் எது ? யார் நடிகர்கள், என்ன மாதிரியான படம் ?

தலைவர் கூட ஒரு அழகான பேமிலி என்டர்டெயினர், என்னோட அபிமான நடிகர்கள், நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள்.ராக்கி படம் எப்படி வந்திருக்கு, பார்த்துட்டீங்களா, ரிலீசுக்காக காத்திருக்கிறேன்?
நான் படம் பார்த்துட்டேன். பிரமிக்க வைக்கிற படமா இருக்கும். உங்க எல்லாருக்குமே படம் பிடிக்கும். இயக்குனர் அருண் வெறித்தனமா எடுத்திருக்காரு.

உங்களுக்குப் பிடித்த விளையாட்டு
கால்பந்து

உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் ?
தோனி

உங்களுக்குப் பிடித்த தமிழ்நாடு கிரிக்கெட்டர்கள்
அஷ்வின், தினேஷ் கார்த்திக்

சந்தானம் நடிச்சதுல பிடிச்ச படம்

தில்லுக்கு துட்டுதடுப்பூசி போட்டாச்சா... கோவிஷீல்டா, கோவாக்சினா?


கோவிஷீல்டு

நெகட்டிவிட்டியிலிருந்து எப்படி மீள்வது ?
புறந்தள்ளுங்கள்...

நேரத்தை எப்படிக் கடத்துவீங்க ?
எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவேன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
முதலிடம் பிடித்த பூஜா ஹெக்டேமுதலிடம் பிடித்த பூஜா ஹெக்டே மகள் திருமணம் : முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஷங்கர் மகள் திருமணம் : முதல்வருக்கு நன்றி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

jay - toronto,கனடா
15 ஜூலை, 2021 - 23:34 Report Abuse
jay என்னடா உங்களுக்கு வேற பெண் கிடக்கமாட்டுது எனது தெரியும் அதான் இந்த நயன்தாரா பின்னால் போறிங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in