ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் பெற்றவர் ஷங்கர். ஜென்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன் முதல் எந்திரன், 2.0 வரை தமிழ் சினிமாவை சரவ்தேச அளவில் கவனிக்க வைத்தவர். ஷங்கர் அடுத்து இந்தியன் 2 படத்தை கமல்ஹாசன் நடிப்பில் இயக்கி வருகிறார். அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் ராம்சரண் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்க இருக்கிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரான ஐஸ்வர்யா ஷங்கர் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித்தை மணக்க இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோகித். 29 வயதான ரோகித், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் விளையாட இடம் கிடைக்காததால் 2015-ல் இலங்கைக்குச் சென்று விளையாடியவர். அதன்பிறகு தந்தை தாமோதரனின் முயற்சியால் புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு அதற்கு கேப்டனாகவும் மாறினார்.
நடப்பு சீசனில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மும்பைக்கு எதிரானப் போட்டியில் புதுச்சேரி அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று அதிகபட்ச ஸ்கோராக 63 ரன்கள் அடித்திருந்தார். ஐஸ்வர்யா - ரோகித் திருமணம் வரும் 27ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் எளிமையாக நடக்க இருக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.