பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
பீஹாரில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன் படம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2019ல் தகுதி தேர்வு நடந்தது. அதற்கான முடிவுகள் கடந்த ஆண்டு மார்ச்சில் வெளியிடப்பட்டன. சில தொழில்நுட்ப பிரச்னைகளால், மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது. அவை சரி செய்யப்பட்டதாக அரசு இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவர் உருது, சமஸ்கிருதம், அறிவியல் அடங்கிய, முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இணையதளத்தில் அந்த மாணவரின் பதிவு எண், மதிப்பெண் என, அனைத்து விவரங்களும் சரியாக உள்ளன. ஆனால், ரிஷிகேஷின் படத்துக்கு பதிலாக, மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ள. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
பீஹாரில் எந்த நியமனமும் மோசடியில்லாமல் நிரப்பப்படுவதில்லை, என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கடந்த 2016இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கில் நடிப்பவர், தமிழில் கொடி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.