பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

அக்கட தேசத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு இரண்டிலும் முன்னணிக்கு வந்தவர் அருந்ததி நடிகை. 2 மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுவிட்டார். உலகம் முழுக்க பிரபலமான சரித்திர படத்திலும் நாயகியாக நடித்து புகழ்பெற்றார். ஆனால் ஒரு படத்துக்காக ஏறிய எடையை குறைக்க முடியாமல் சிரமபட்டவர் இப்போது ஓரளவுக்கு குறைந்திருக்கிறார்.
இந்த நடிகை டாப்பில் இருக்கும்போதே தமிழில் 2 நடிகர்கள் அவருடன் நடிக்க விரும்பினார்கள். இருவரது பெயருமே ஒரே வார்த்தையில் தான் தொடங்கும். ஒருவர் தமிழ் சினிமாவில் அதிகமான படங்களை கையில் வைத்திருப்பவர். இன்னொருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர். இருவரும் விரும்பியபோது அந்த நடிகை முன்னணியில் இருந்தார். இப்போது படங்கள் இல்லாமல் இருப்பதால் இருவரது கனவும் கனியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நாயகி தேர்வாக தேவசேனா பெயரை சொல்லி வருகிறார்கள்.