Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவுக்கு மாணவர்கள் வகுப்பு எடுப்பர் : காயத்ரி காட்டம்

21 ஜூன், 2021 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Neet-Comment-:-Gayathiri-Raghuram-replied-to-Suriya

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வே இல்லாமல் செய்வோம் என, தேர்தலுக்கு முன், தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும் என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளிப்படையாக அறிவிக்கும் அளவுக்கு, நிலைமை மாறியுள்ளது.

இந்நிலையில், இதை எப்படியாவது குழப்ப வேண்டும் என, சிலர் களம் இறங்கியுள்ளனர். அதில் ஒருவர், தன் அறக்கட்டளை வாயிலாக அறிக்கை வெளியிட்டிருக்கும், நடிகர் சூர்யா. அவரின் அறிக்கையில், மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்த, ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில், நீட் நுழைவுத் தேர்வு வாயிலாக தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடு, காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வு ஆபத்தானது என்று, சொல்லப்பட்டுள்ளது.

சூர்யாவின் அறிக்கைக்கு, டுவிட்டர் வாயிலாக, பா.ஜ., கலை இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அரசு பள்ளியில் படித்து, உயர் கல்வி பெறும் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம் என, குறிப்பிட்டிருக்கும் நடிகர் சூர்யா எந்த அரசு பள்ளியில் படித்தார்? அவர் துவக்கத்தில் இருந்தே, ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும், தனியார் பள்ளியில் படித்தவர். பட்டப்படிப்பை கூட, லயோலா கல்லுாரியில் தான் முடித்தார். அப்படி இருப்பவருக்கு, அரசு பள்ளி மாணவர்களின் நிலை குறித்து என்ன தெரியும்?

சமூக நீதிக்கு எதிரானது என, நீட் தேர்வு பற்றி குறிப்பிடுகிறார். இவர், நிஜத்தை அறிந்து தான் பேசுகிறாரா; இல்லை, மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை அறிக்கையாக வெளியிட்டு விட்டாரா? நீட் தேர்வு வரும் முன், பணம் படைத்தவர்கள் மட்டுமே, மருத்துவ பட்டப்படிப்பு படிக்க முடியும் என்ற சூழல் இருந்தது. 50 லட்சத்தில் இருந்து, 1 கோடி ரூபாய் வரை கட்ட வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே, எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்பு இருந்தது. நீட் தேர்வு வந்த பின்னே, அந்த நிலை மாறியுள்ளது.

கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் அதிகம் பேர், மருத்துவ படிப்பில் சேர்கின்றனர். புள்ளி விபரங்கள் என்னிடம் உள்ளன. நீட் தேர்வால் ஆபத்து என்பதற்கான ஆதாரங்களோடு சூர்யா வரட்டும். கல்வியாளர்கள் மத்தியில், இருவரும் விவாதிக்கலாம். என் வாதம் எடுபட்டால், நீட் தேர்வு குறித்து பேசுவதை, நடிகர் சூர்யா விட்டு விட வேண்டும். தி.மு.க., தான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாமல் தடுமாறினால், சூர்யா முட்டுக் கொடுக்க வந்து விடுகிறார். சூர்யா குடும்பத்தினர், இனிமேல், தி.மு.க., கரை வேட்டி கட்டிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

நீட் தேர்வை சினிமா படப்பிடிப்பு நடத்துவது போல, சூர்யா நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த மாயையில் இருந்து, அவர் விடுபட வேண்டும். நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராக இருக்கும் அரசு பள்ளி மாணவர்கள், சூர்யா வீட்டுக்கு சென்று, நீட் தேர்வு குறித்து வகுப்பு எடுக்கும் சூழல் உருவாகும்; அதற்கு ஏற்பாடு செய்யப்படும். சூர்யாவின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிப்பவர்கள், நீட் தேர்வுக்கு தயார் படுத்தப்படுகின்றனர். அங்கு சென்று நீட் தேர்வு ஆபத்து என, குரல் கொடுப்பாரா சூர்யா? பொய் தகவல்களை கூறி, தமிழக மாணவர்கள் வாழ்க்கையில், சூர்யா விளையாடக்கூடாது. மீறினால், விளைவுகள் கடுமையாக இருக்கும்.

இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (35) கருத்தைப் பதிவு செய்ய
'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் ?'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் ... பீஸ்ட் - விஜய் 65 பட தலைப்பு பீஸ்ட் - விஜய் 65 பட தலைப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (35)

Muthu - Nagaipattinam,இந்தியா
25 ஜூன், 2021 - 09:36 Report Abuse
Muthu அப்படி சொல்லுங்கள் அம்மணி.. சிங்கத்திற்கு சரியான பதில் கொடுத்துள்ளீர்கள். சினிமாவில் சிங்கம் போன்று நடித்தால் வாழ்விலும் சிங்கம் என நினைப்பு போலும். அப்படி நினைத்தால் இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லவேண்டியது தானே??? குடும்பமே சரியான துரோகிகள் கூட்டம்
Rate this:
K.Varadharajulu - Chennai,இந்தியா
24 ஜூன், 2021 - 13:24 Report Abuse
K.Varadharajulu உனக்கு என்ன தகுதி இருக்கு சூரிய பத்தி பேச
Rate this:
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
24 ஜூன், 2021 - 13:01 Report Abuse
Muthu Kumarasamy நீட் தேர்வு மூலம் மருத்துவக்கல்லூரிகள் கட்டண கொள்ளை அடிப்பது தவிர்க்கப்பட்டிருப்பது உண்மை. தற்போது தமிழக அரசு நீட் தேர்விற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விட்டு, இந்தியா முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்படியும், நீட் தேர்வு வினாக்கள் அந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். தற்போது நீட் தேர்வில் பெரும்பாலான கேள்விகள் சி பி எஸ் சி பாட திட்டத்தில் இருந்தே கேட்கப்படுகிறது. சி பி எஸ் சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே பெரும்பாலும் நீட் தேர்வில் தேர்ச்சியாகிறார்கள் என்பதை கணனிக்கு தக்கது.
Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
23 ஜூன், 2021 - 04:22 Report Abuse
Siva Kumar முதலில் இவர் நடத்தும் அறக்கட்டளை மூலம் உதவி பெரும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்துவதை நிறுத்திய பிறகு நீட் தேர்வை பேசட்டும்.
Rate this:
Arudhradharasenam - Chennai,இந்தியா
23 ஜூன், 2021 - 02:06 Report Abuse
Arudhradharasenam I have been teaching in Medical Colleges in abroad for twenty years. In all those countries I taught they had National Common Entrance Test for Medical, Engineering & Science subjects without any partiality. It is common and conducted at a time throughout Nation. But in India on the name of NEET Exam, the Central (MODI) Government is playing politics. The exams are not conducted properly. Discrimination from one state to another state, discrimination from rich to poor. More our MBBS and Engineering degrees are not recognized by developing and developed countries. More over Indian standard of education is not of international standard. Instead of improving the quality of teaching straight away going for National Entrance Exam Test is ridiculous. Our Method of teaching is not uniformly spread throughout nation. It changes from state to state and change in within state it self. When the education is uniform throughout nation, then only the Central Government have the right to conduct nationwide entrance test. Even in Our Education tem lots of discrimination. Instead of making our education tem uniform straight away conducting NEET, indicates our educational experts do not study properly about our socio economical and educational tem properly. If you improve this then only our education tem will be good, otherwise we are all like born idiots. So it is better to remove NEET throughout the country. Dr.B.N.Arudhradharasenam
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in