ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா | மோகன்லாலுக்கு அக்., 4ல் விழா எடுத்து கவுரவிக்கும் கேரள அரசு | பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ் மற்றும் பலர் நடிக்க தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தை இந்த வருடம் அக்டோபர் 13ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை முழுவதுமாக முடிக்க முடியவில்லை.
எஞ்சியுள்ள படப்பிடிப்பை ஜுலை மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அப்படி நடத்தி முடித்தாலும் அதற்கடுத்த இரண்டு மாதங்களில் வேலைகளை முடித்து அக்டோபர் 13ம் தேதி படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்கிறார்கள். எனவே, படத்தை அடுத்த வருடம் 2022 ஏப்ரல் மாதத்தில் வெளியிடலாமா என யோசித்து வருகிறார்களாம்.
கொரோனா முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையே தியேட்டர்களைத் திறந்த போது தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்த்ததை விடவே அதிகம் வந்தார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி வரவில்லை. இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் ஓரிரு மாதங்கள் நீடிக்கலாம் என்கிறார்கள்.
இந்திய அளவிலும், உலக அளவிலும் படத்தை பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் அதற்கேற்றபடி படத்தை விளம்பரப்படுத்துதல், அனைத்து மொழிகளின் வேலைகளையும் முடிக்க கால அவகாசம் தேவைப்படுகிறதாம்.
அதோடு, 'ஆர்ஆர்ஆர்' பட வெளியீடு தெரிந்தால் தான் மற்ற படங்களை வெளியிடுவது பற்றியும் முடிவு செய்ய முடியும் என அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் கருதுகிறார்களாம். எனவே, படத்தின் சரியான வெளியீட்டுத் தேதியை ராஜமவுலியும், தயாரிப்பாளர்களும் சீக்கிரமே வெளியிட வேண்டும் என தெலுங்குத் திரையுலகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.