லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஷங்கர் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்து 2005ம் ஆண்டு வெளிவந்த படம் 'அந்நியன்'. இப்படத்தை 16 வருடங்கள் கழித்து ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். தமிழில் படத்தை இயக்கிய ஷங்கரே ஹிந்தி ரீமேக்கை இயக்க, ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கப் போவதாக அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பு வெளியானதும் படத்தைத் தமிழில் தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் படத்தின் ஹிந்தி ரீமேக் கதை உரிமை தங்களிடமே இருப்பதாக தெரிவித்தது. அதற்கு ஷங்கரும் பதில் கொடுத்து கதையின் உரிமை தனக்குத்தான் சொந்தம் என்றார்.
அதன்பிறகு அந்த விவகாரம் குறித்து எந்த சர்ச்சையும் வெளியாகவில்லை. இதனிடையே, படத்தை ஹிந்தியில் தயாரிக்க உள்ள பென் இந்தியா நிறுவனம் அவர்களது அடுத்தடுத்த தயாரிப்புகளைப் பற்றிய மொத்த அறிவிப்பை இன்று(ஜூன் 17) வெளியிட்டது. அதில் 'அந்நியன்' ஹிந்தி ரீமேக்கும் இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் அந்நிறுவனம் படத்தைத் தயாரிக்கப் போவது உறுதியாகியுள்ளது. கதை உரிமை விவகாரத்தில் என்ன மாதிரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது விரைவில் தெரிய வரும்.