Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் : மீரா மிதுன்

17 ஜூன், 2021 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Meera-Mithun-threaten-suicie

ஒரு சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்தவர் மீரா மிதுன். பிறகு அழகி போட்டி நடத்தியதில் நடந்த முறைகேடு தொடர்பாக போலீஸ் விசாரணைக்குள் வந்து பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். அதோடு அடிக்கடி சினிமா முன்னணியினர் பற்றி தாறுமாறாக எதையாவது பேசி தன்னை விளம்பரத்துக்குள் வைத்துக் கொள்கிறவர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்வாணமாக படுத்துக் கொண்டு காளி குறித்து பேசி பரபரப்பாக்கினார். இந்த நிலையில், தான் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தொர்டர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது:


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அஜித் ரவியின் (அழகி போட்டி ஒருங்கிணைப்பாளர்) அமைப்பை விட்டு விலகினேன். அந்த அமைப்புக்காக நான் வேலை செய்து, அழகிப் பட்டம் வென்றேன். அஜித் ரவி செய்த அநீதியால் அந்த அமைப்பை விட்டு விலகி என் சொந்த அமைப்பை உருவாக்கினேன். அஜித் ரவி என் பெயரை கெடுத்து விட்டார். என் மீது போலி வழக்குகள் தொடர்ந்தார். தன் அதிகாரம் மற்றும் பணத்தை வைத்து எனக்கு பிரச்சனைகள் கொடுத்தார்.

அவர் என்ன செய்தாலும் அதில் இருந்து நான் மீண்டு வந்தேன். அவர் என்னை பின்தொடர்கிறார், என் வேலையை கெடுக்கிறார், என் ப்ராஜெக்டுகள் வெளிவருவதை தடுக்கிறார், என் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகிறார். 3 ஆண்டுகளாக அவர் என்னை டார்ச்சர் செய்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் கிரிமினல்களை வைத்து கொடுமைப்படுத்துகிறார். அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. ஆனால் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். தற்கொலை தான் எனக்கு இருக்கும் ஒரே வழி. என் தற்கொலைக்கு அஜித் ரவி மட்டும் தான் காரணம். சுஷாந்த் சிங் போன்று நான் இறந்த பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும். இது தற்கொலை அல்ல கொலை. என எழுதியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் ‛‛நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன், தற்கொலை செய்ய போகிறேன்'' என கண்ணீர் மல்க ஒரு வீடியோவை மீரா மிதுன் வெளியிட்டு இருந்தார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
சாலையோர மக்களுக்கு உணவளித்த ராஷி கண்ணாசாலையோர மக்களுக்கு உணவளித்த ராஷி ... 40 நடிகர், நடிகைகளை சமாளிப்பது சவால்: ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி 40 நடிகர், நடிகைகளை சமாளிப்பது சவால்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20 ஜூன், 2021 - 06:50 Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் யாரிந்த புள்ளாண்டன்..? ஜடாமுடி வளர்த்துண்டு தேமேன்னு நிக்கிறன்... கொரோனா தொல்லையாவிட இந்த புள்ளாண்டான் இம்சை ஜாஸ்தியா இருக்கே.. என்னமோ போடா..
Rate this:
sakthivelraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19 ஜூன், 2021 - 13:40 Report Abuse
sakthivelraj அட்வான்ஸ் வாழ்துக்கள், டோன்ட் வெயிட் டூ பாஸ்ட்
Rate this:
Sharvintej - மதுரை ,இந்தியா
19 ஜூன், 2021 - 05:50 Report Abuse
Sharvintej இன்னும் ஆவலயா ??
Rate this:
18 ஜூன், 2021 - 14:43 Report Abuse
Prasanna Krishnan Who is Ajith Ravi? did he raped you? very bad taste
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
17 ஜூன், 2021 - 23:07 Report Abuse
BalaG வாழ்த்துகள்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in