பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, அவர் மட்டுமே நடித்து வெளியான படம் ஒத்த செருப்பு சைஸ் 7. தேசிய விருதை பெற்ற இப்படத்தை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் பார்த்திபன். அதன் முதல்கட்டமாக இப்படத்திற்கு ஹிந்தியில் என்ன தலைப்பு வைக்கலாம்? சொல்லுங்கள் என டுவிட்டரில் ரசிகர்களிடம் கேட்டிருந்தார் பார்த்திபன். இதையடுத்து ஏகப்பட்ட பேர் தலைப்பை அவருக்கு பதிவிட்டு வந்தனர்.
இவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள பார்த்திபன், டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், புதிதாய் இன்று பிறக்கிறோம், எளிதாய் சிரமம் கடக்கிறோம், பெரிதாய் வாழ்வில் சாதிக்கிறோம். ஹிந்தி தலைப்பு. அள்ளி வழங்கிய எண்ணிலடங்கா-எதிர்பாரா கோணங்களில் பலரது பாராட்டுக்குரியது. சிலது சிறப்பு! அனைத்தும் பரிசீலனையில். விரைவில் தேர்வாகும். பங்குக்கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார்.