மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' |

பரதேசி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரித்விகா. என்றாலும் மெட்ராஸ் படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார். அதன்பிறகு அழகுட்டி செல்லம், அஞ்சல, கபாலி, ஒரு நாள் கூத்து, இருமுகன், எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது, ஓநாய்கள் ஜாக்கிரதை டார்ச்லைட், சிகை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சில படங்களில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தாலும் முழுமையான ஹீரோயினாக நடித்ததில்லை.
முதன் முறையாக மாடு என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காமெடி நடிகர் காளி வெங்கட் நடிக்கிறார். புதுமுக இயக்குனர் பிரம்மா இயக்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பிறகு தனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்று கருதிய ரித்விகாவிற்க்கு எதிர்பார்த்தது போன்று வாய்ப்புகள் அமையவில்லை. காலம் கடந்தாலும் இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.




