மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
இந்தியாவில் புகழ்பெற்ற வெப் தொடர் தி பேமிலி மேன். இந்தியாவின் ரா அமைப்பில் பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரி, ஒரு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு எப்படி சர்வதேச சதி திட்டங்களை முறியடிக்கிறார் என்பதுதான் இதன் ஒன்லைன்.
இதில் அந்த அதிகாரியாக மனோஜ் பாஜ்பாய் நடிக்கிறார். அவரது மனைவியாக பிரியாமணி நடிக்கிறார். தற்போது இதன் இரண்டாவது சீசன் பலத்த எதிர்ப்புக்கு இடையே வெளியாகி உள்ளது. இதில் விடுதலைபுலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி இங்குள்ள சில அமைப்புகளும், சில கட்சிகளும் குற்றம் சாட்டி உள்ளது. இரண்டாவது சீசனில் சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார். இதனை ராஜ் மற்றும் டிகே இயக்கி உள்ளனர்.
இந்த சீரிசின் முதல் சீசனில் ஸ்ரீகாந்த் திவாரி காஷ்மீர் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முறியடித்தார். தற்போது வெளியாகி இருக்கும் 2வது சீசனில் இலங்கை போராளிகளும், பாகிஸ்தான் உளவு பிரிவும் இணைந்து நடத்த இருந்த சதி திட்டத்தை முறியடித்தார். மூன்றாவது பாகத்தில் என்ன செய்யப் போகிறார் என்பது இரண்டாவது சீசனின் 9வது (கடைசி) பகுதியில் தெளிவாக குறிப்பிட்டு விடுகிறார்கள்.
கொரோனாவால் மக்கள் படும் துன்பங்களை காட்டுகிறார்கள். அதன்பிறகு ஒரு சீன இளைஞன் ஒரு சாதாரண அடுக்குமாடி வீட்டுக்கு கையில் லேப் டாப்புடன் நுழைகிறான். பிறகு தனது அறையில் அமர்ந்து தனது லேப் டாப்பை திறந்து தனது தலைமையுடன் உரையாடுகிறான். நான் நாகாலாந்தையும், அருணாச்சல பிரதேசத்தையும் கவர் செய்து விட்டேன் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறேன் என்று மெசேஜ் அனுப்புகிறான். அனுமதி கிடைப்பதோடு தொடர் முடிகிறது.
எனவே 3வது சீசனில் இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் சீன அரசு அல்லது சீனாவில் உள்ள ஒரு ரகசிய அமைப்பு இந்திய மக்கள் மீது கொரோனா வைரசை பரப்ப திட்டமிடுகிறது. அதனை ஸ்ரீகாந்த் திவாரி எப்படி தடுக்கப் போகிறார் என்பதுதான் 3வது சீசனின் கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது..