லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் |

பத்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர் நடிகை இலியானா.. இளம் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து வந்த இலியானா ஒருகட்டத்தில் பாலிவுட்டில் இருந்து நடிக்க வாய்ப்பு தேடி வந்ததால் தெலுங்கு சினிமாவை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டில் செட்டிலானார். ஆனாலும் இலியானாவால் அங்கே பெரிதாக சாதிக்க முடியவில்லை..
கடந்த 2018ல் அமர் அக்பர் அந்தோனி என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். ஆனால் அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என எதிர்பார்த்தவருக்கு வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.. இதற்கு பின்னணியில் ஷாக்கிங்கான காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது.
அதாவது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை இலியானா திருப்பி தரவில்லை. இதனால் தமிழில் அவருக்கு மறைமுக ரெட்கார்டு போடப்பட்டதுடன், தெலுங்கு தயரிப்பாளர்கள் சங்கத்திடமும் இந்த தகவலை கூறியுள்ளனர். ஏற்கனவே இலியானாவின் சில அடாவடிகளால் கடுப்பில் இருந்த தெலுங்கு திரையுலகமும் அவர் மீது மறைமுக ரெட்கார்டு போட்டு, இப்போது வரை அது தொடர்ந்து வருகிறதாம்..