ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இயக்குனர் சசி இயக்கிய ஐந்து ஐந்து ஐந்து படத்தில் பரத் ஜோடியாக நடித்தவர் எரிக்கா பெர்ணான்டஸ். அதற்பிறகு விரட்டு, விழித்திரு படங்களில் நடித்தார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் பாலிவுட் பக்கம் போனவர் இப்போது அங்கு முன்னணி சின்னத்திரை நடிகை ஆகிவிட்டார்.
குச் ரங் பியார் கே ஐஸே பி என்ற தொடரின் 2 சீசன்களிலும் டாக்டர் சோனாக்ஷி போஸ் கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார். தற்போது இதன் 3வது சீசனில் நடித்து வருகிறார். இடையில் கவுஸ்தி சிந்தகி கே என்ற தொடரிலும் நடித்தார். எரிக்கா பெர்ணான்டசுக்கு சில வெப் சீரிசில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், போல்ட் கண்டன்ட் என்ற பெயரில் ஆபாசமாக நடிக்க அவர்கள் கேட்டதாகவும், அதனால் தான் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: வெப் தொடர்களில் சரியான கதைகளே இல்லாமல் வெறும் காசு சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருகிறார்கள். எந்தவொரு காரணமும் இன்றி போல்டாக நடிக்க வேண்டும் என்றால் எப்படி நடிக்க முடியும் என நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடத்தில் பதில்களே இல்லை .
போல்ட் எனும் பெயரில் தேவையில்லாத காட்சிகளை கமர்ஷியல் மற்றும் வியாபார நோக்கத்துடன் திணிப்பது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கதைக்கு முக்கியமாக இருந்தால் அப்படி நடிப்பதில் எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. ஆனால் வலிந்து திணித்து பணம் சம்பாதிக்க நினைத்தால் அதற்கு நான் உடன்பட மாட்டேன். அதனால்தான் தேடிவந்த வாய்ப்புகளை நிராகரித்தேன். சின்னத்திரை தொடர்களில் நடிப்பதே எனக்கு நிறைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. என்கிறர் எரிக்கா.