மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். அவர் தமிழில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ள 'பாரிஸ் பாரிஸ்' படம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளிவராமல் முடங்கி உள்ளது.
அப்படத்தைத் தவிர ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக பிரச்சினை காரணமாக முடங்கி உள்ளது. இவற்றைத் தவிர தமிழில் 'ஹே சினாமிகா' என்ற படத்திலும், பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா' படத்திலும், பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிகளை விட ஹிந்தியில் குறைவான படங்களில் அவ்வப்போது நடித்து வருவார். அவருடைய அடுத்த ஹிந்திப் படமாக 'உமா' என்ற படம் உருவாக உள்ளது. இப்படத்தில் காஜல் தான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். தத்தகட்டா சிங் இயக்கும் இப்படம் பற்றி தயாரிப்பாளர் அவிஷேக் கோஷ் உறுதி செய்துள்ளார்.