'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பொதுவாக மலையாள நடிகைகள் தமிழ் படங்களில் நடித்தாலும் டப்பிங் பேசுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் முதல் காரணம் அவர்களுக்கு என்னதான் தமிழ் சரளமாக பேசத் தெரிந்திருந்தாலும் அவர்கள் பேச்சில் மலையாள வாசனை இருக்கும், மற்றொன்று பிசியான பிறகு டப்பிங் பேசுவதற்கு ஆகும் தேதிகளை படப்பிடிப்புக்கு கொடுத்தால் அதிக பணம் கிடைக்கும். நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்கு நன்றாக தமிழ் தெரிந்தாலும் அவர்கள் டப்பிங் பேசாததற்கு இதுதான் காரணம்.
ஆனால் இப்போது தமிழுக்கு வந்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி இதற்கு நேர் எதிர்மாறாக இருக்கிறார். அவர் அறிமுகமான முதல் படமான ஆக்ஷனில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தாலும் அதில் அவர் தான் டப்பிங் பேசினார். இப்போது நடித்து முடித்துள்ள ஜெகமே தந்திரம் படத்திலும் அவர்தான் பேசியுள்ளார். அடுத்து பொன்னியின் செல்வனில் செந்தமிழ் பேச இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு படத்தில் நான் நடிக்கும் கேரக்டருக்கு நானே டப்பிங் பேசினால் தான். அந்த படத்தில் நான் நடித்ததற்கான முழு திருப்தி கிடைக்கிறது. டப்பிங் பேசும்போது தான் என்னை முழு நடிகையாக உணர்கிறேன். ஆக்ஷன் படத்தில் நடித்தபோது எனது தமிழ் மிக மோசமாக இருக்கும். எனது தமிழ் நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள். தமிழைக் கொலை செய்யாதே என்பார்கள்.
ஜகமே தந்திரம் திரைப்படத்தில் என் வசனங்களை நான் தான் பேசியிருக்கிறேன். இப்போது நன்றாகத் தேறியிருப்பதாக நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் படத்திலும் என் குரலில் டப்பிங் பேச வேண்டும் என்று மணி சாரைக் கேட்டு வருகிறேன். அதற்கான பயிற்சிகளை இப்போதே தொடங்கி விட்டேன். வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அந்த மொழியில் பேசவே முயற்சிப்பேன் என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.