இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் |

மலையாள படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் ரெம்யா சுரேஷ். கடைசியாக சமீபத்தில் வெளியான நயன்தாரா நடித்த நிழல் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாக பரவும் ஆபாச வீடியோ ஒன்றில் ரெம்யா சுரேஷ் காணப்படுகிறார். இது மலையாள சினிமா உலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ள ரெம்யா சுரேஷ். அந்த வீடியோவில் இருப்பது நான் அல்லை. அச்சு அசலாக என்னைப் போலவே இருக்கும் பெண் என்று அந்த வீடியோவில் கதறி அழுகிறார். அவர் அந்த வீடியோவில் பேசி இருப்பதாவது:
இன்டர்நெட்டில் வலம் வரும் வீடியோ குறித்து தோழி தெரிவித்த பிறகே எனக்கு தெரிய வந்தது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. ஆனால் அந்த பெண் என்னை போன்றே இருக்கிறார். என்னை நன்கு தெரிந்தவர்களுக்கு அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பது தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு வித்தியாசம் தெரியாது என்பது தான் என் பயமே.
அந்த வீடியோ தொடர்பாக நான் ஆலப்புழா காவல் நிலைய சைபர் பிரிவில் புகார் அளித்திருக்கிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பது எனக்கு தெரியும். அது என் கணவருக்கும் தெரியும். போலீஸ் அதிகாரிகளும் ஆதரவாக இருக்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்துள்ளனர். அந்த வீடியோவை ஷேர் செய்த நபரின் விபரங்களை சேகரித்திருக்கிறார்கள்.
காவல் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய போது தைரியமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது. ஆனால் என் பேஸ்புக் பக்கத்தில் நிறைய மெசேஜ் வந்து கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை பார்த்த பிறகு என் தோழிகள் போன் செய்தால் என்ன சொல்வது என்று பயமாக இருக்கிறது. ஏனென்றால் திடீர் என்று பார்த்தால் அந்த பெண் அப்படியே என்னை போன்றே இருக்கிறார்.
நான் எந்த சமரசமும் பண்ணாமல் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அதனால் தயவு செய்து என்னை தவறாக நினைத்து, அந்த வீடியோவில் இருப்பது நான் என்று கருதி மெசேஜ் அனுப்ப வேண்டாம். இவ்வாறு அந்த வீடியோவில் கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.