ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் தெலுங்கு ‛பேபி' | லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா | இன்னும் ஏழே நாளில் படப்பிடிப்பு முடிகிறது: 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் கொடுத்த 'குட் பேட் அக்லி' அப்டேட் | ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் |
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட பல்வேறு ஓடிடி நிறுவனங்கள் பல தயாரிப்பாளர்களிடம் பேசி வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் அலை திடீரென வந்ததால் தியேட்டர்கள் படங்களை வெளியிட முடிவு செய்து காத்திருந்தவர்கள் திண்டாடி வருகிறார்கள். தியேட்டர்களைத் திறக்க இன்னும் மூன்று மாத காலமாவது ஆகும் என்கிறார்கள். சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களில் தங்களது படங்களை வெளியிட பேசி வருகிறார்கள்.
ஆனால், ஓடிடி நிறுவனங்கள் பிரபலங்களின் படங்களை மட்டுமே குறி வைத்து தேடி வருகின்றன. மற்ற சிறிய பட்ஜெட் படங்களையோ, முன்னணியில் இல்லாத வேறு சில நடிகர்களின் படங்களையோ வாங்க மிகவும் தயக்கம் காட்டுவதாக பலர் குற்றம் சாட்டுகிறார்கள். கடந்த வருட கொரோனா பரவலின் போதும் இப்படியான நிலைதான் இருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒன்று இயக்குனர் பிரபலமாக இருக்க வேண்டும் அல்லது படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பிரபலமாக இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை விதிக்கிறதாம் ஓடிடி நிறுவனங்கள். சில சிறிய படங்களை பிரபலமாக உள்ள சில இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் மொத்த உரிமைகளையும் வாங்கி வைத்திருக்கிறார்களாம். அந்தப் படங்களுக்கு தயாரிப்பு செலவைக் காட்டிலும் இரு மடங்கு விலைகளைச் சொல்கிறார்களாம்.
அதே சமயம் ஓடிடி தளங்களில் நல்ல 'கன்டென்ட்' உள்ள படங்கள் வரவேற்பைப் பெறும் என்பதை முந்தைய வெளியீடுகள் நிரூபித்துள்ளது. தியேட்டர் வியாபாரத்தை விடவும் ஓடிடி வியாபாரத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.