அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‛‛கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், மகராசன்'' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன்(91) இன்று(ஜூன் 3) காலை 8.45 மணி அளவில் மாரடைப்பினால் காலமானார். இவருக்கு சக்குபாய் என்ற மனைவியும், குமாரவேலன் என்ற மகனும், பரமேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
மகன் ஜி.என்.ஆர்.குமாரவேலன், தமிழில் பிரபல இயக்குனர் ஆவார். நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கி உள்ளார். தற்போது அருண் விஜய்யை வைத்து சினம் என்ற படத்தை இயக்கி உள்ளார். மறைந்த ஜி.என்.ரங்கராஜன் இறுதிச்சடங்கு சென்னை, நுங்கம்பாக்கம் மயானத்தில் நடைபெறுகிறது.