தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | போர்ஷே கார் உடன் ரேஸ் களத்தில் அஜித் : தமிழக அரசின் SDAT லோகோவும் அச்சிடல் | விவாகரத்து வழக்கு : ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் ஆஜர் | தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில் | சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி | கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி | திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு | 15 ஆண்டு காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | சிவகார்த்திகேயன் படம் : ஜெயம் ரவி போட்ட கண்டிஷன் |
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமாக பரவியது. தற்போது அதன் தாக்கம் சிறிது குறைந்துள்ளது. இந்த நிலையில் நடிகர், நடிகைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கி வருகிறார்கள். சிலர் வேறு வழிகளில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான யஷ், சுமார் 3 ஆயிரம் திரைப்பட தொழிலளார்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொரோனா நிதி வழங்குகிறார். இது தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இது தொடர்பாக யஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் கணக்கிலடங்கா நபர்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக கோவிட் தோற்று உள்ளது. எனது சொந்த கன்னடத் திரைத்துறையும் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான காலகட்டத்தை மனதில் கொண்டு எங்கள் திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3000 உறுப்பினர்களுக்கு எனது சொந்தச் செலவில் தலா 5 ஆயிரம் ரூபாயை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளேன்.
இந்தச் சூழலால் ஏற்பட்டிருக்கும் வலி மற்றும் இழப்புக்கு இது தீர்வாகாது என்பது எனக்குத் தெரியும். இது நம்பிக்கைக்கான கீற்று. நல்ல காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை.
இவ்வாறு யஷ் தெரிவித்துள்ளார்.