Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் | விஜய் படத்தை நிராகரித்த நடிகர் | 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' - 'ஆப்' செய்யப்பட்ட டிரைலர் கமெண்ட்டுகள் | சமந்தா போல் அரிய வகை நோயால் அவதிப்படும் பூனம் கவுர் | நடிகை மலாய்க்கா அரோரா கர்ப்பமா? - அர்ஜூன் கபூர் காட்டம் | விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்தின் புதிய அப்டேட் | 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட சர்ச்சை பேச்சு : இஸ்ரேல் சினிமா இயக்குனர் விளக்கம் | திருமணத்தால் வந்த கோபம் : ராஜ்கிரண் மீது குற்றம் சாட்டும் வளர்ப்பு மகள் | மனைவியுடன் மீனாட்சி அம்மனை தரிசித்த விஷ்ணு விஷால் | கனவாய் மறைந்து போன கவர்ச்சி தாரகை : சில்க் ஸ்மிதாவின் 62வது பிறந்ததினம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாதி பெயரால் திசை திருப்பும் போராளிகள் : கவிஞர் தாமரை சாட்டை

29 மே, 2021 - 09:38 IST
எழுத்தின் அளவு:
Kavingar-Thamarai-about-Sexual-harassment-and-violence-against-women

பாலியல் பிரச்னைகளை கூட பிராமண எதிர்ப்பாக திசை திருப்பும் போலி போராளிகளை தோல் உரிக்க வந்துவிட்டார் கவிஞர் தாமரை. பாலியல் வன்கொடுமைகளும் பக்கம் பார்த்து பேசுதலும்! என்ற தலைப்பில் தாமரை கொட்டித் தீர்த்த குமுறல்களில் இருந்து சில பகுதிகள் இங்கே...

சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல் மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. பாரம்பரியம் மிக்கதாக சமூகத்தில் உயர்படியில் இருப்பதாக தோற்றம் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது. ராசகோபாலன் சிறையில். எவ்வளவு வேகமான நடவடிக்கை. வரவேற்க வேண்டும். கல்வி அமைச்சருக்கும் காவல் துறைக்கும் பாராட்டுகள். அப்படியே கொஞ்சம் திரும்பி பார்ப்போமா.

மூன்றாண்டுகளுக்கு முன் சின்மயி உட்பட 13 பெண்கள் பாடலாசிரியர் வைரமுத்து மேல் வைத்த பாலியல் குற்றச்சாட்டின்போது ஊடகமும் சமூகமும் அரசும் பெண்ணுரிமை போராளிகளும் என்ன செய்தனர். சின்மயி பார்ப்பனர் என்கிற ஒரே காரணத்துக்காக அடித்து துவைக்கப் பட்டார். அவர் தொழில் பாதிக்கப்பட்டு தொந்தரவு கொடுத்து அலைக்கழிக்கப்பட்டார். இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. தனியொரு பெண்ணாக நின்று போராடுகிறார்.

முகிலன் என்றோர் ஊரறிந்த போராளி... ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக ஏமாற்றி, ஓடி ஒளிந்து கடத்தல் நாடகம் ஆடுகிறார். வழக்கு பதிவான பிறகே கண்டுபிடிக்கப்பட்டு கைது ஆகிறார். ஆனால் பிணையில் வெளியே வந்து மீண்டும் தொழில் ஆரம்பித்தாகி விட்டது. அதற்கு முன், தோழர் தியாகு என்று அழைக்கப்பட்ட, கைதேர்ந்த, முகிலனுக்கெல்லாம் முன்னோடி போராளி, பழம் தின்று கொட்டை போட்ட பெருச்சாளி, உதவி நாடி வந்தவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிந்த சங்கதி.

மெத்தபடித்த மேதாவி சுபவீ களவாணி என்பதும் அறிந்தது. ஆனால் நடந்தது என்ன. குழந்தையோடு நான் தெருவுக்கு வந்தது தான் மிச்சம். இன்றைக்கு ஆவேசமாக நெற்றிக்கண் திறக்கும் நக்கீரர்களும், இழுத்து வந்து தெருவில் வைத்து அறுத்துவிட வேண்டும் என்று பொங்கும் களஞ்சியங்களும் அன்று செய்தது என்ன. ராஜகோபாலன்களுக்கும், வைரமுத்து, தியாகு, முகிலன்களுக்கும் என்ன வேறுபாடு?

ஒரு பார்ப்பன பொறுக்கி கிடைத்தால் மொத்துவீர்கள், திராவிட பொறுக்கி என்றால் ஒத்துவீர்களோ. பாலியல் குற்றம் நிகழ்ந்தால் சாதி, மதம், சமூக நிலை, பதவி, பணபலம் எதையும் பாராமல் பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்க வேண்டும். அதுதான் அறம். மாறாக, பக்கம் பார்த்துதான் பொங்குவேன் என்றால் அதற்கு பெயர் பச்சோந்தித்தனம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் ... ஓடிடி தளத்தில் வெளியாகும் கடைசி விவசாயி ஓடிடி தளத்தில் வெளியாகும் கடைசி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

meenakshisundaram - bangalore,இந்தியா
02 ஜூன், 2021 - 05:03 Report Abuse
meenakshisundaram உண்மையில் இந்த விஷயத்தை ஊதி பெரிது பண்ண நினைப்பவர்களை பாத்து சிரிக்கத்தான் வேண்டும். கற்பழிப்பு .கொலை பெண்களுக்கெதிரான வேறு வகை வன்கொடுமைகளை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவர்கள் .ஒரு ஆசிரியர் ,பிறந்த மேனிக்கோ எப்படியோ சின்ன திரையில் (உண்மை என்னவென்று தெரியாது)வகுப்பு எடுக்க வந்தார் என்று கேள்வி.அது ஒட்டு மொத்தமாக அந்த வகுப்பிலுள்ள எல்லோரையுமே பாதிக்கப்படும் விஷயம் அல்லவா ?அதில் கொஞ்சம் கூட முன் யோசனையோ அல்லது பாதிக்கப்பட்ட மன நிலையிலோ செய்த்துள்ளாரா ?அதற்கு முழு சாட்சியமும் இருக்குமே .இதெல்லாம் பதில் காணப்பட வேண்டிய விஷயம்.மேலும் இந்த நிகழ்வு பள்ளியின் வளாகத்திலா நடந்துள்ளது?இதை எல்லாம் ஆராயப்பட வேண்டும்.ஒரு மாணவியின் புகார் என்றால் அப்போது மற்ற மாணவ மாணவர் கல் என்ன ஆனார்கள் ?இதை விசாரிக்க வேண்டியது போலீஸ் தவிர ,கூப்பிடப்படாத விருந்தாளிகளாக பலர் இடம் கிடைக்காத காரணத்தால் சாட்சிகள் போல கருத்துக்களை வெளி இடுவது சரியா? இந்த வாத்தியாரை இப்படி செய்ய சொல்லி அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு நாடகம் ஆடுகிறார்களோ என்றும் விசாரணை செய்வது நல்லது.
Rate this:
baygonspray - Aryan,ஈரான்
31 மே, 2021 - 05:22 Report Abuse
baygonspray தாமரை தியாகுவுடன் திருமணம் செய்தபோது , தியாகுவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது . அதுவும் தியாகு ஒரு நக்சலைட் . உங்களுக்கு ஆதரவு இல்லாத காரணம் இது தான் . போராளிகள் மீது உள்ள சொந்த காழ்ப்புணர்ச்சி பழி தீர்க்க பள்ளி மாணவிகள் எதிராக திரும்பவேண்டாம் .
Rate this:
அ.வேல்முருகன் - Salem,இந்தியா
29 மே, 2021 - 18:07 Report Abuse
அ.வேல்முருகன் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து தருகிறார். தவறு செய்த ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். பள்ளி நிர்வாகி,முதல்வர் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர். இதில் சாதிக்கு என்ன வேலை? அந்த பள்ளியை மாநில அரசு ஏற்று நடத்துவது குறித்து ஆலோசனை நடப்பதாகமாநில கல்வி அமைச்சர் அறவிக்கிறார். தவறிழைத்தவர்களுக்கு தண்டனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். அதற்காக அந்த நிறுவனத்தை கையகப்படுத்துவோம் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது. சொந்த விருப்பு, வெறுப்பு இல்லாமல் நேர்மையான நடவடிக்கை தான் தேவையே அன்றி பிற அல்ல.
Rate this:
டண்டணக்கா ணக்காவேல்முருகன் சாா்...நீங்க இன்னும் அவுங்க அஜென்டாவை இன்னும் புரிஞ்கலைனு நினைக்கிரேன்..நல்ல பெயரெடுத்த பள்ளி..பள்ளி நிர்வாகத்தை தன் வசம் எடுப்பதுதான் சிலரது ப்ளான்.. அப்பதான் நல்ல காசு பாக்கலாம்....கனியக்கா ஆரம்பிக்கும்போதே பொறி தட்டிச்சு...இப்ப கரக்டா அந்த ரூட்லதான் போகுது....
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29 மே, 2021 - 16:10 Report Abuse
J.V. Iyer இது கலிகாலம்.
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
29 மே, 2021 - 14:44 Report Abuse
S Ramkumar என்ன பண்ணுறது படடாதானே புத்தி வருது.
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in