டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா(60) கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேற்று நள்ளிரவு அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவில் பல படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் குணச்சித்ர நடிகராக நடித்தவர் வெங்கட் சுபா. தயாரிப்பாளர் சித்ர லட்சுமணன் உடன் யு-டியூப்பில் படங்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் படம் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று நள்ளிரவு அவரது உயிர் பிரிந்தது.
இவருக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் டி.சிவா டுவிட்டரில், ‛‛என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகன் வெங்கட் 12.48 amக்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை தாள முடியாத வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
மனோபாலா, பிரகாஷ்ராஜ், இந்துஜா, தனஞ்செயன், விஜய் மில்டன், அறிவழகன், ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வெங்கட் சுபா மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.