விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு | 15 ஆயிரம் கோடி குடும்ப சொத்தை இழக்கிறார் சைப் அலிகான் | காசோலை மோசடி : ராம் கோபால் வர்மாவுக்கு 3 மாதம் சிறை தண்டனை |
அயன், மாற்றான், காப்பான், அனேகன், கவண் என மகத்தான படங்களை உருவாக்கிய கே.வி.ஆனந்த், கொரோனா பெருந் தொற்றால் இந்த உலகை விட்டு பிரிந்தார். தற்போது அவரது உதவியாளர்கள் பலரும் தனியாக படம் இயக்குகிறார்கள். சிலர் வேறு சில இயக்குனர்களோடு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து கே.வி.ஆனந்தின் நினைவை போற்றும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மாற்றான் படத்தில் இடம்பெற்ற "யாரோ யாரோ நான் யாரோ" என்ற பாடலை பின்னணி இசையாக பயன்படுத்தி இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். கே.வி.ஆனந்த் படப்பிடிப்பில் பணிபுரியும் காட்சிகள் , உதவி இயக்குனர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள், கலைஞர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இறுதியில் "நீங்கள் கற்று கொடுத்த தைரியமும், நீங்கள் கற்றுக் கொடுத்த சினிமாவும் என்றும் எங்களை முன்னோக்கியே வழிநடத்தும் குட்பை மாஸ்டர்" என்று முடித்திருக்கிறார்கள். இது காண்போரை கண்கலங்க வைப்பதாக இருக்கிறது.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும். https://www.youtube.com/watch?v=BPv5PwodMkU&t=15s