'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி முருகன் கொரோனா ஊரடங்கால், வேலையின்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது சொந்த செலவில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அதையடுத்து நடிகை ஜெயசித்ரா 200க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூபாய். 50 ஆயிரமும், நடிகை லதா 25 ஆயிரமும் நடிகர் விக்னேஷ் 10 ஆயிரமும் வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது.
மேலும் தமிழகம் முழுக்க இருக்கும் நாடக நடிகர்களுக்கு உதவும் வகையில் அந்தந்த பகுதி பிரமுகர்களைக் கொண்டு உதவவும் பூச்சி முருகன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பைக்கரா பி.சசிதேவா அவர்கள் 150க்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.




