எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் விடியோக்கள் மூலம் மக்களுக்கு பல வேண்டுகோளை விடுத்து வருகிறார்கள். நடிகை சரண்யா பொன்வண்ணன் வெளியிட்டுள்ள வீடியோவில் துணி மாஸ்க் அணியாதீர்கள், டபுள் மாஸ்க் அணியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஒரு வருடமாக கொரோனா நம்மை கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வருடத்தில் முடிந்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க பல வழிமுறைகள் உள்ளன. அதில் முக்கியமானது, நாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தொற்று தீவிரமாகாமல் கண்டிப்பாக அது நம்மைக் காக்கும். நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அடுத்து முகக் கவசம். பலருக்கும் எப்படி அணிவது என்றே தெரிவதில்லை. மூக்கையும், வாயையும் தான் முக்கியமாக மூட வேண்டும். ஆனால் பலர் முகக் கவசத்தை வாய்க்குக் கீழ் இறக்கி வைத்துவிட்டுப் பேசுகின்றனர்.
2 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள். பல வகையான முகக் கவசங்கள் உள்ளன. இதில் துணியால் ஆனது பயன் தராது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே அதைப் பயன்படுத்தாதீர்கள். மருத்துவர்கள் பயன்படுத்தும் முகக் கவசத்தைப் பயன்படுத்துங்கள். முடிந்தால் அதற்கு மேல் இன்னொரு முகக் கவசம் என, இரட்டை முகக் கவசங்கள் அணிவது சிறந்தது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நம் வீட்டுக்குள் இருக்கும் குடும்பத்தினருடன் இருக்கும் போது பரவாயில்லை. ஆனால் உறவினர் யாராவது உங்களைப் பார்க்க வந்தால் உடனடியாக முகக் கவசம் அணியுங்கள். அவர்களையும் அணியச் சொல்லுங்கள். நம்மையும், உலகையும் காக்க இதையெல்லாம் பின்பற்ற வேண்டும். நமக்காகத் தான் அரசாங்கம் இந்த விஷயங்களைச் சொல்லியிருக்கிறது.இதைப் பின்பற்றவில்லை என்றால் இந்தக் காலம் நீண்டு கொண்டே போகும்.
நாலு பேர் மட்டும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் எந்தப் பயனும் இல்லை. எல்லோரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். செய்தால் கரோனாவை சீக்கிரம் விரட்டிவிடலாம். சில நாள் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் சில நாள் மட்டுமே அந்தக் கடினச் சூழல் இருக்குமா என்பதும் நம் கையில் தான் உள்ளது.
எனவே தயவு செய்து தடுப்பூசி, கைகள் சுத்தம், முகக் கவசம், சமூக இடைவெளி என எதையும் மறக்காதீர்கள். அரசாங்கத்தோடு ஒத்துழைப்போம். நம் நாட்டைக் காப்போம்.
இவ்வாறு சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.