அம்மன் தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு? | ஆர்ஜே ஆனந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள் | மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர் ஹேமா - என்ன ஆச்சு? | ரசிகர்களுக்காக முடிவை மாற்றிய சிபு சூரியன் | ஓடிடி ரிலீஸ் : தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு | 'பொன்னியின் செல்வன்' பின்னணி இசையில் டிரம்ஸ் சிவமணி | மிஸ் இந்தியா 2022 போட்டியிலிருந்து விலகிய ஷிவானி ராஜசேகர் | திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராம் பொத்தினேனி | அடுத்தடுத்து வெளிவர உள்ள பெரிய படங்கள் | தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவு |
தனுஷ் நடித்த வடசென்னை படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக, தனது துறுதுறு நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சரண் சக்தி குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், தற்போது டீன் ஏஜ் பருவத்தை தாண்டியுள்ள நிலையில், அவரைத்தேடி சில பெரிய படங்களின் வாய்ப்புகள் வந்து உள்ளது. அந்த வகையில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சரண் சக்தி.
அதுமட்டுமல்ல, மிகப்பெரிய வெற்றிபெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் சரண் சக்தி. அந்த படத்தின் ஹீரோ யஷ் உடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த படங்கள் வெளியானால் அடுத்ததாக நிறைய சோலோ ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் இவரைத் தேடி வரும் என நம்பலாம்.