சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிரபாஸ் முதன்முறையாக நடிக்கும் புராணப்படமாக உருவாக இருக்கிறது 'ஆதிபுருஷ்' என்கிற படம். ஓம் ராவத் என்பவர் இயக்கும் இந்தப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்தப்படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார். அவரை எதிர்க்கும் ராவணனாக பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார். சீதாவாக கீர்த்தி சனான் நடிக்கிறார்.
இந்தப்படத்தில் பிரபாஸின் சகோதரராக அதாவது லட்சுமணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சன்னி சிங் நடிக்கிறார். இதுபற்றி சன்னி சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “நானும், பிரபாஸும் இந்தப்படத்திற்காக உடல் எடையை அதிகரிக்கவும் கைகளின் தசைகளையும் வலுவாக்கும் முயற்சியில் இருக்கிறோம். ஆனால் அதற்காக செயற்கையான மருந்துகள் எதையும் எடுத்துக்கொள்ளாமல், இயற்கையான முறையிலேயே தான் பயிற்சி செய்து வருகிறோம்” என கூறியுள்ளார்.