லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் லாவண்யா திரிபாதி. தமிழில் பிரம்மன் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு அவருக்கு இங்கு வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மாயவன் படத்தில் நடித்தார். தற்போது அவர் போகட்டும் போகட்டுமே என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். அவருடன் கைதி, மாஸ்டர் பட வில்லன் அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். சத்யா மற்றும் ஜென் இசை அமைத்திருக்கிறார்கள். லோகி இயக்கி உள்ளார்.
இது இசை ஆல்பம் என்றாலும் சண்டை ஆல்பம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த ஆல்பத்தில் வரும் கதை இதுதான். அர்ஜூன் தாசும், லாவண்யாவும் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்து படித்த அநாதைகள். இருவருக்குள்ளும் இருப்பது காதலா, நட்பா என்ற புரியாத ஒரு நிலையில் ஒரு கும்பல் லாவண்யாவை கடத்துகிறது. ஒரு மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகளை எடுக்க திட்டமிடுகிறது. அந்த கும்பலிடமிருந்து தப்பும் லாவண்யா, அர்ஜூன் தாசை தேடி வருகிறார். அப்போது அவளது காதலை உணர்ந்து கொள்ளும் அர்ஜூன் தாஸ், அவரை பாதுகாப்பாக வைத்து விட்டு அவளை துரத்தி வரும் கூலிப்படையுடன் பயங்கரமாக சண்டை போடுகிறார். இறுதியில் கூலிப்படைகளை அழிக்க வெடிகுண்டு வீசுகிறார். அதில் அவரும் சிக்கி கொள்கிறார். அவர் பிழைத்தாரா, காதல் பிழைத்ததா என்பது கதை. இதனை ஒரு பாடலின் பின்னணியில் காட்டுகிறார்கள். பொதுவாக இசை ஆல்பம் என்றால் நடனம் பிரதானமாக இருக்கும், இதில் சண்டை காட்சி பிரதானமாக இடம் பெற்றுள்ளது.