'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழகத்தை போல கேரளாவிலும் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியே மீண்டும் வென்று, பினராயி விஜயனே மீண்டும் முதல்வராக தொடர்கிறார். இதற்கான பதவியேற்பு விழா வரும் வியாழன் (மே-20) அன்று மாலை 5 மணி அளவில் திருவனந்தபுரத்தில் கவர்னர் முன்னலையில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேரளாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதுவும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மூன்றடுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பதவியேற்பு விழா அறிவிப்பு பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே தனது மனதில் தோன்றியதை பளிச்சென கூறிவிடும் நடிகை பார்வதி, இந்த பதவியேற்பு விழா அறிவிப்பு வெளியானதும், இந்த விழாவை காணொளி காட்சி வாயிலாக நடத்துமாறு முதல்வர் பினராயி விஜயனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது : “கேரளாவில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதுடன் கள பணியாளர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டியும் வருகிறீர்கள். இதுபோன்ற சமயத்தில் கிட்டத்தட்ட 500 பேர் கூடும் விதமான பதவியேற்பு விழாவை நடத்துவதன் மூலம், மீண்டும் நோய் தொற்று அதிமாக பரவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இறுதிக்கட்ட அபாயத்தில் இருக்கிறோம். இந்தசமயத்தில் அதனால் இந்த விழாவை நேரடியாக நடத்துவது தவறான நடவடிக்கையாகவே அமையும்.. அதை தவிர்த்து, காணொளி காட்சி வாயிலாக நடத்தினால் இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும்” என விமர்சனத்துடன் கூடிய வேண்டுகோளை வைத்துள்ளார். பார்வதி.