ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த 'உப்பெனா' படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி. தெலுங்கில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவிட்டார்.
கிர்த்தி தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தில் அறிமுகம் ஆக உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால், தெலுங்கைத் தவிர வேறு எந்த மொழியிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.
தன்னுடைய தற்போதைய படங்கள் குறித்து, டுவிட்டரில், “என்னுடைய அடுத்த படங்களைப் பற்றி பலவிதமான வதந்திகளைக் கேட்கிறேன். இதுவரையில் நான் மூன்று படங்களில் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். நானி காரு, சுதீர் பாபு காரு, ராம் காரு ஆகியோருடன் தலா ஒரு படங்களில் நடிக்கிறேன். ஒத்துக் கொண்ட படங்களில் நடித்து முடிப்பது மட்டுமே தற்போது என்னுடைய கவனம் இருக்கிறது. அடுத்து புதிய படங்களில் கையெழுத்திட்டால், நான் நிச்சயம் பதிவிடுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.