இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா |
கொரோனா இரண்டாவது அலையின் சீற்றத்தினால் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த முறை சினிமா, சின்னத்திரை நடிகர்கள் பலரும் பாதிக்கப்படடு மரணமடைந்துள்ளனர். நேற்று அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவும் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார்.
இப்படி கொரோனா மரணங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து ஆறா துயரத்தில் திரையுலகம் தத்தளித்து வரும் நேரத்தில் பிரியா பவானி சங்கர் டுவிட்டரில், ‛‛ஒவ்வொரு துயரமான செய்தியை கேட்கும்போதெல்லாம் மிகுந்த வருத்தமளிக்கிறது. இதில் சோகமாக விஷயம் என்னவென்றால் இது யாருக்கும் ஏற்படக்கூடும். நீங்கள், நான், அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் யார் வேண்டுமானால் பாதிக்கப்படலாம் தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இதுபோன்று நடந்திருக்க கூடாது. இந்த தருணத்தில் அருண்ராஜா காமராஜ் மிகுந்த தைரியத்துடன் இருக்க ஆண்டவனை மனதார வேண்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.