2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

இயக்குனரும், நடிகருமான மனோபாலா சோசியல் மீடியாவில் ரொம்ப பிசியாக இருப்பார். யார் படங்களுக்கு பூஜை போட்டாலும் அந்த செய்தியை டுவிட்டரில் பதிவிடுவார். அதேபோல் எந்த படங்கள் வெளியானாலும் வெற்றி பெற வாழ்த்து சொல்வார். அதோடு தனது புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிடுவார். இந்நிலையில் தற்போது அவர் படுத்திருப்பது போன்ற ஒரு செல்பியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்து, அவர் மருத்துவமனையில் படுத்திருப்பதாக நினைத்துக் கொண்டு, என்ன ஆச்சு சார்? கொரோனா ஏதாவது வந்திருச்சா? உடம்ப பார்த்துக் கோங்க... என்று பலரும் நலம் விசாரித்ததோடு, அவர் குணமடையவும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து தனது டுவிட்டரில் உடனடியாக ஒரு மறுப்பு செய்தி பதிவிட்டுள்ளார் மனோபாலா. அதில், என் அன்பு மக்களே, நான் ஏதோ ஒரு போட்டோவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு நினைக்கல. நான் நல்லா தான் இருக்கேன். எனக்கு ஒன்றுமில்லை. அன்பு (அப்படித்தான் சொல்லனும்) காட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.