'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.
அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்தவாரம் ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று(மே 17) வந்த நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு நிதியாக தன் சார்பில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
![]() |
தமிழக முதல்வராக ஸ்டாலின் முதன்முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில் ஏற்கனவே டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து இருந்தார் ரஜினி. இப்போது நேரிலும் வாழ்த்திவிட்டு, கொரோனா தடுப்பு நிதியையும் வழங்கினார்.
![]() |