ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கொரோனா முதல் அலை கடந்த வருடம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த வருடம் இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த வருட கொரோனா தொற்றால் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தார். உடல்நலம் தேறி வந்தவர் பின்னர் மரணம் அடைந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து தமிழ்த் திரையுலகமும், தமிழ் சினிமா ரசிகர்களும் மீள்வதற்கு ரொம்ப நாட்கள் ஆனது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் சினிமா பிரபலங்கள் பலர் கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து மரணமடைந்து தமிழ்த் திரையுலகத்தினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இயக்குனர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த், தயாளன், நடிகர்கள் பாண்டு, மாறன், ஜோக்கர் துளசி, கல்தூண் திலக்ஜி, தயாரிப்பாளர்கள் சேலம் சந்திரசேகரன், அந்தோணி, பாடகர் கோமகன், இன்று இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, நடிகர் நிதிஷ் வீரா ஆகியோர் கொரோனா காரணமாக மரணம் அடைந்துள்ளனர்.
மேலும், சில சினிமா பிரபலங்களின் உறவினர்களும் கொரோனா காரணமாக இறந்ததை அந்தப் பிரபலங்கள் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளனர். இன்னமும் சில பிரபலங்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து வாட்சப்பைத் திறந்தாலே கொரோனா மரணங்கள் பற்றிய செய்திகள் வருவது பலரையும் வருத்தமடைய வைத்துள்ளது. இந்த கொரோனா இரண்டாவது அலையை சீக்கிரமே நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.