பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் நடித்து வெளிவந்த 'கர்ணன்' படத்தில் படம் முழுவதும் தனுஷுடனேயே இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் லால்.
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த லாலுக்கு 'கர்ணன்' படத்தின் எமராஜா கதாபாத்திரம் ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தது. படத்தில் அவர் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இளைஞனான தனுஷுடன் எப்போதும் கூடவே இருக்கும் ஒரு நண்பன் போல நடித்திருந்தார். படத்தில் அவர் ஏன் சொந்தக் குரலில் பேசவில்லை எனப் பலர் கேட்டதற்கு, பேஸ்புக் பதிவு மூலம் பதிலளித்துள்ளார்.
“கர்ணன்' படத்தில் எமராஜா கதாபாத்திரத்தில் நான் ஏன் சொந்தக் குரலில் பேசவில்லை என உங்களில் பலர் கேட்டிருந்தீர்கள். 'கர்ணன்' படம் திருநெல்வேலி பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு படம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சென்னையில் பேசப்படும் தமிழில் இருந்து மிகவும் வித்தியாசமாகப் பேசப்படும் வழக்கு உடையது திருநெல்வேலி தமிழ்.
மலையாளத்தில் கூட திருச்சூர் வழக்கில் மலையாளத்தைப் பேசச் சொன்னால், யாராலும் அதை அந்த அளவு சரியாகப் பேச முடியாது. கர்ணன் படம் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழ் மொழியின் தனித்தன்மையான உச்சரிப்புடன் மொத்த கதாபாத்திரத்தையும் பேச வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம்.
அதில் நடித்த பலர் உள்ளூர் மக்கள், எனது டப்பிங் படத்தில் தனியாகத் தெரிய கிடைத்த நல்ல வாய்ப்பாகவும் இருந்தது. எனது 100 சதவீதப் பங்களிப்பில் இருந்து சிறிதும் குறையக் கூடாது என நினைத்தேன், அதனால், அது பற்றிய சந்தேகம் எனக்கு இருந்தது.
இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு ஆகியோரது பிடிவாதத்தால் டப்பிங் பேசுவதற்காக சென்னை சென்றேன். இருப்பினும் படத்திற்கு நல்லது கருதியும், எனது வேண்டுகோளை ஏற்றும் ஒரு திருநெல்வேலிக்காரரின் குரல் படத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், நல்ல வார்த்தைகளுக்கும் நன்றி,” என லால் குறிப்பிட்டுள்ளார்.