100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
கொரோனா பேரிடர் இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது. புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு இந்த பேரிடரை சமாளிக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
ஒரு வாரத்திற்கு முன்பே முதல்வரின் நிவாரண நிதியை யார் ஆரம்பித்து வைப்பார்கள் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். முதல்வரே நிதி கேட்காத வரையில் அது பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லை. முதல்வர் கேட்டுக் கொண்ட பிறகுதான் முதல் ஆளாக சிவகுமார் குடும்பத்தினர் நேற்று முதல்வரைச் சந்தித்து 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கியுள்ளனர்.
அவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த நிதி வழங்கும் படலத்தை அடுத்து எந்தெந்த சினிமா பிரபலங்கள் தொடரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
சிறிய குழந்தைகள் கூட அவர்கள் சேர்த்து வைத்த உண்டியல் தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்ற செய்தி தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
யார் முதல்வராகப் பதவியேற்றாலும் அவர்களிடம் சென்று தங்களுக்கு வேண்டிய சலுகைகளைக் கேட்டுப் பெறுவதில் தான் திரையுலகத்தினர் முனைப்பு காட்டுவார்கள். மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் பல முக்கிய சங்கத்தினர் அவரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வைத்துவிட்டார்கள்.
இப்போது முதல்வர் தரப்பிலிருந்தே நிவாரண நிதி கேட்ட பின்பு பெரிய தொகையாக திரையுலகத்திலிருந்து ஒன்றே ஒன்றுதான் வந்துள்ளது. அஜித், விஜய் உள்ளிட்ட ஒரு சிலர் இன்னும் முதல்வருக்கு வாழ்த்து கூடத் தெரிவிக்கவில்லை. இனி வரும் நாட்களில் எத்தனை பிரபலங்கள் நிவாரணத் தொகை தர முன்வருவார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.