Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கெட்ட பழக்கங்களை கைவிடுங்கள் : கொரோனாவிலிருந்து மீண்ட இயக்குனர் மீரா கதிரவன் வேண்டுகோள்

11 மே, 2021 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Give-up-bad-habits-:-Director-Meera-Kathiravan-request-to-all-after-recovered-from-Corona

ஜெய் நடித்த 'அவள் பெயர் தமிழரசி', வெங்கட் பிரபு, கிருஷ்ணா நடித்த 'விழித்திரு' ஆகிய படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளார். கொரோனா பாதிப்பு வந்ததைப் பற்றியும் அதிலிருந்து மீண்டதைப் பற்றியும் பேஸ்புக்கில் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

“திடீர் காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் என அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவரை அனுகினேன். பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தது. நுரையீரலில் மெல்லிய அளவிற்கே தாக்கம் இருந்தது. மருத்துவரின் அறிவுரைப்படி 21 நாட்கள் என்னை நானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதன் மூலம் கோவிட் பாசிட்டிவ் நெகட்டிவாக மாறியது. தினசரியும் நண்பர்களில் யாராவது ஒருவர் பாசிட்டிவ் என்கிற தகவலுடனும் மரண செய்தியுடனும் பதற்றத்துடன் போனில் அழைக்கிறார்கள்.

எல்லோரிடமும் சொல்லித் தீராத அளவிற்கு பயம் இருக்கிறது. இந்த நோய் உடலில் உருவாக்குகிற உபாதைகளை விட நம் உளவியலில் உருவாக்குகிற தாக்கம் பெரிது. முகக் கவசம், தனி மனித இடைவெளி, அரசின் வழிகாட்டுதல்கள் என அனைத்தையும் தவறாது பின்பற்றுங்கள்.

கோவிட்டின் இரண்டாம் அலையிலிருந்து மட்டுமல்ல மூன்றாம் அலையிலிருந்தும் தப்பிப்பதற்கு இப்போது நாம் பின்பற்றுகிற கட்டுப்பாடுகள் தான் உதவப் போகிறது. அறிகுறிகள் தென்பட்டால் பயமும் தயக்கமும் இல்லாமல் உடனே மருத்துவரை அனுகி ஆலோசனைகளைப் பெறுங்கள்.ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதை எளிதில் வென்று விடலாம். பயமே முதல் எதிரி. பெரிய கிருமி.

தகவல் தெரிந்து போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த தோழமைகளுக்கு அன்பும் நன்றியும்.

பின் குறிப்பு
என்னை ஆட்கொண்டிருந்த எல்லா தீய பழக்கங்களையும் கைவிட்டு கடந்த இரண்டு வருடங்களாக நடைப்பயிற்சி செய்ததும் எனக்கு பலனளித்தது. இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு புகைப்பிடித்தல் மற்றும் இதர கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் கை விட்டு விடுங்கள். வாழ்தல் இனிது !,” என இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு ஆலோசனைப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'விக்ரம்' படத்தில் நடிக்கவே கமல்ஹாசன் ஆர்வம்'விக்ரம்' படத்தில் நடிக்கவே ... 'மாநாடு' - பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தள்ளி வைப்பு 'மாநாடு' - பர்ஸ்ட் சிங்கிள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Krush - Polisai, Chennai,இந்தியா
17 மே, 2021 - 10:44 Report Abuse
Krush நல்ல கருத்து சார்..ஆனால் நீங்கள் சார்ந்த திரை உலக பிரபலங்கள் அந்த "கெட்ட பழக்கங்களை" சினிமா வில் காட்டாமல் இருந்தால் எதிர்கால சந்ததிகளுக்கு புண்ணியமா போகும்... அடலீஸ்ட் நீங்களாவது செய்வீர்களா?
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13 மே, 2021 - 13:50 Report Abuse
Ramesh R நல்ல கருத்து
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in