டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் இசையமைப்பாளர் தமன். 'புட்டபொம்மா' போன்ற சூப்பர்ஹிட் பாடல்களையும் தொடர்ந்து கொடுக்கிறார். ஆனால் பிரிக்க முடியாதது எது என்றால் இசையமைப்பாளர் தமனும் அவர் குறித்த மீம்ஸ்களும் தான் என்பது போல சோஷியல் மீடியாவில் நெட்டிசன்களின் கிண்டல் தாக்குதல்களுக்கு அவ்வப்போது ஆளாகி வருகிறார் தமன். அவரது பாடல் ஏதாவது ஒன்று வெளியானாலும், அதை எதிலிருந்து காப்பி அடித்தார் என கூறி உடனடியாக மீம்ஸ் வெளியாவது வழக்கமாகி விட்டது.
சமீபத்தில் நெட்டிசன் ஒருவர் கிங் படத்தில் டுபாக்கூர் இசையமைப்பாளராக நடித்திருந்த நடிகர் பிரமானந்தத்தின் புகைப்படங்களை ஒன்று சேர்த்து வெளியிட்டு, “இசையமைப்பாளர் தமன் என ஒருத்தர் இப்படித்தான் இருந்தார் என என் குழந்தைகளிடம் சொல்வேன்” என குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த தமன், “அப்படியே தயவுசெய்து உங்கள் மனைவியிடமும், எனது வேலையெல்லாம் விட்டுவிட்டு இப்படி ஒரு மீம் தயார் செய்துகொண்டிருந்தேன் என சொல்லுங்கள் பிரதர்.. வாழ்க்கையில் ஒரு உதவாக்கரை மீம் கிரியேட்டரை திருமணம் செய்துகொண்டதற்காக அவர் ரொம்பவே பெருமைப்படுவார்” என சற்று காட்டமாகவே பதிலடி கொடுத்துள்ளார் தமன்.